ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதாலேயே சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடிந்ததாகவும், இல்லாவிட்டால் அது இல்லாமல் போவதற்கான அறிகுறி காணப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பதுளையில் நேற்று திங்கட்கிழமை நெடுஞ்சாலைகள் அமைச்சுக்குரிய அலுவலகம் ஒன்றை திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் பிரதமர் ரணிலின் வாலில் தொங்கிக்கொண்டு சென்றேன் என்றும் இறைச்சியின் எலும்புகளை சாப்பிடச் சென்றேன் என்றும் பல தரப்பினர் விமர்சித்தபோதும் நான் கட்சியின் சார்பில் செயற்பட்ட காரணத்தினால என்னால் சரியான முடிவெடுக்க முடிந்தது.
எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையென்றால் இலகுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்க முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாலேயே கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடிந்துள்ளது.
மாறாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல மறுத்திருக்கு மாயின் சுதந்திர கட்சி இல்லாது போயி ருக்கும்.