Breaking
Thu. Jan 9th, 2025

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குப்பற்றிய தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின் போதே இவர்கள் சந்தித்துக்கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தற்போது இடம் பெற்றுவரும் மாற்றங்கள் குறித்தும் ஒபாமா தனது வாழ்த்துக்களை நேற்றை தினம் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார்.

ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத் தொடரில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பங்குபற்றும் இறுதியான கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமது வாழ்த்துக்களையும், இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டையும் தெரிவித்திருந்தமை அனைவரது பார்வையையும் ஈர்த்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By

Related Post