Breaking
Mon. Feb 3rd, 2025

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிட பிரதிநிதி ரொஹான் பெரேரா ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீமூனை நேற்று (22) ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு சான்றுகள் பாராட்டுக்கள் தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ரொஹான் பெரேரா தனது வாழ்த்துக்களையும் சான்றுகளையும் நாட்டின் சார்பாக தெரிவித்துள்ளார்.

பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வின் பின்னர் செயலாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஒன்று க்கு – ஒன்று என்ற ( one-to-one meeting) ரீதியில் இடம்பெற்ற கூட்டத்தில் சுமூகமான முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதன் போது புதிய வதிவிட பிரதிநிதியை வரவேற்கும் நிகழ்வில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தால் சிறந்த சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கு அச் சாதகமான சூழல் மிகவும் உதவுகிறது. இதன் மூலம் சிறந்த நட்புறவு சர்வதேசங்களுடன் பேணப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளவிருக்கும் சிறந்த நட்புறவு பரஸ்பரம் ஆகியவற்றை முன்னெடுக்க புதிய பிரதிநிதிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் பெரேரா இதற்கு முதல் வௌிவிவகார அமைச்சின் சட்ட ரீதியான ஆலோசகராக சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post