இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.
ஐ.நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நீதி பதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்வாங்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் முழுமையான நீதிமுறையில் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உள்ளக விசாரணையை மேற்கொள்ள இலங்கை முழுமையான தகுதியை கொண்டிருக்கின்றது. அவ்வாறான நிலையில் ஐ.நா.வின் பரிந்துரையை ஏற்க முடியாது இதேவேளை, சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பாக இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றமை வெளியாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.