Breaking
Sun. Mar 16th, 2025
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராவண பலய அமைப்பு ஒரு மோசமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.
கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு இன்று (1) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை இராவண பலய அமைப்பின் பிக்குகள் முன்னெடுத்திருந்தார்கள்.
இதன்போது பான் கீ மூன் தமிழ் மக்களுக்கு சார்பானவர் என்றும், சிங்கள மக்களை கணக்கில் கொள்வதில்லை என்றும் பலத்த கோஷங்களை எழுப்பினார்கள்.
ஐ.நாவின் முன்றலில் ஒன்று கூடிய இவர்கள், பான் கீ முனுக்கு எதிராக பல சுலோகங்களை ஏந்திக்கொண்டு, தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
மேலும், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இராவண பலய அமைப்பைச் சேர்ந்த பிக்குகளை எச்சரித்ததுடன் குறித்த இடத்தை விட்டு உடனடியாக சென்று விடுமாறும் கூறியுள்ளனர்.
இதையடுத்து பிக்குகள் கோஷங்களை எழுப்பியவாறே குறித்த இடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.

By

Related Post