Breaking
Mon. Dec 23rd, 2024
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இவர்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தரும் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள்.

இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை தேடிப்பார்க்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

இந்தக் குழுவினரின் இலங்கை விஜயம் குறித்த அறிக்கை ஒன்று அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post