Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொது­மக்­க­ளுக்கோ நாட்­டிற்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக நான்­ கூ­று­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடு­க­ளினால் வெளியி­டப்­ப­ட­வி­ருந்த பார­தூ­ர­மான அறிக்­கையை மாற்றியமைப்பதற்கு புதிய அர­சாங்­கத்­தினால் முடிந்­தது. இருந்­த­போ­திலும் முன்­னைய அர­சாங்கம் தொடர்ந்தும் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இந்த அறிக்கை மிகவும் காரம் கூடி­ய­தாக அமைந்­தி­ருக்கும். அதி­லி­ருந்து நாம் நாட்டை பாது­காத்­துள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை,முன்னாள் இரா­ணுவ உயர் அதிகாரிகளை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விற்கு அழைத்­தமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரி­யாது. பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் இதனை அறி­வு­றுத்­தா­மையை நினைத்து நான் மிகவும் வருந்­து­கின்றேன் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பொலன்­ன­றுவை அர­ல­கன்­வில வில­யாய மகா வித்­தி­யா­ல­யத்தில் சனிக்­க­ழமை நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் முன்னர் நடை­பெற்ற அணி­சேரா மாநாட்­டிற்கு 117 நாடு­களின் தலை­வர்கள் எமது நாட்­டிற்கு வருகை தந்­தனர். எனினும் அந்த மாநாட்­டிற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியல் எமது அர­சாங்கம் மிகவும் மோச­மா­னதும் தர­மற்­ற­து­மான வெ ளிநாட்டு கொள்­கையின் கார­ண­மாக வல்­ல­ரசு நாடு­களின் எதிர்ப்­பிற்கு உள்ளாகியது. இதனால் பல்­வேறு விளை­வு­க­ளுக்கு எமக்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டது.

எனினும் ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்­சிக்கு வந்த புதிய அர­சாங்கம் ஆட்சி பீட­மே­றி­ய­வுடன் அனைத்து நாடு­க­ளுடன் சுமூ­க­மான உற­வினை நாம் கட்­டி­யே­ழுப்­பினோம். அண்­மையில் அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடு­களின் பொது சபை கூட்­டத்­தொ­டரில் நான் கலந்து கொண்ட போது அதிகமான நாட்டு தலை­வர்­களையும் என்னால் சந்­திக்க முடி­யாமல் போனது. அதனை நினைத்து நான் வருந்­து­கின்றேன் எனினும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் முக்கியமான தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.

சர்­வ­தேச நாடு­க­ளுடன் சுமூ­க­மான உற­வினை வளர்த்­த­மைக்கு நான் மாத்­திரம் காரணம் அல்ல. அர­சாங்கம் என்ற அனை­வரும் பொது­வான தொரு வேலைத்­திட்­டத்தை நோக்கி பய­ணித்­த­மை­யி­னா­லேயே இந்த வெற்­றியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு முடிந்தது.

இதே­வேளை எந்த நாடு­க­ளுடன் உற­வினை கட்­டி­யெ­ழுப்­பி­னாலும் எமக்கு பிரச்­சினை இல்லை. இலங்­கையில் மனித உரி­மைகள், நல்­லாட்சி, மற்றும் ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­ப­டு­வ­துடன் ஊழல் மோச­டிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­பட வேண்டும் என்றே ஐக்­கிய நாடுகள் அமைப்பு் எமக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

முன்­னைய காலங்­களில் தேர்­தல்­களின் போது இரண்டு பிர­தான கட்­சி­யி­னர்­க­ளி­டையே எவ்­வா­றான பிரச்­சி­னைகள் எழுந்­த­ன என்பதை நீங்கள் அறி­வீர்கள். அர­சியல் மோதல்­க­ளினால் எத்­தனை பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்,? எத்­தனை வீடுகள் தீயிட்டு கொழுத்­தப்­பட்­டுள்­ளன? ஆட்சி மாற்­றங்கள் ஏற்­படும் வேளை­களில் அரச சேவை­யி­லி­ருந்து எத்­தனை பேர் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர்? அர­சியல் இட­மாற்றம் மிகவும் சக­ஜ­மாக இடம்­பெற்று வந்­துள்­ளது. எனினும் புதிய ஆட்­சியின் போது குறித்த கலா­சா­ரத்­திற்கு முடி­வுக்­கட்டி பொது இலக்­கினை வெற்றி கொள்­வ­தற்கு இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன.

இந்­நி­லையில் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு முடி­வுக்­கட்டி புதிய அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்­கு­வதா? அல்­லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்ற கட்சி பேதங்­க­ளினால் அடித்­துக்­கொண்டு உயிரை பணயம் வைப்­பதா? என்­ப­தனை மக்கள் முடிவு செய்­ய­வேண்டும். அர­சியல் பழி­வாங்கல் யுகத்­திற்கு முடி­வுக்­கட்ட வேண்டும்.
அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களில் இவ்­வாறு அர­சியல் கட்­சிகள் ரீதி­யான பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தில்லை. மிகவும் சுதந்­தி­ர­மான தேர்தல் நடத்­தப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான சூழலை நாம் இலங்கையில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நாம் தய­ரா­கி­யுள்ளோம். இத­னூ­டாக நாட்டை அபி­வி­ருத்தி செய்­வதே எமது பிர­தான நோக்­க­மாகும்.

ஐக்­கிய நாடு­க­ளினால் வெளியி­டப்­ப­ட­வி­ருந்த பார­தூ­ர­மான அறிக்­கையை மாற்­று­வ­தற்கு எம்மால் முடிந்­தது. இருந்­த­போ­திலும் முன்­னைய அர­சாங்கம் தொடந்தும் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் மிகவும் பார­தூ­ர­மா­ன­தாக அமைந்­தி­ருக்கும். அதி­லி­ருந்து நாம் நாட்டை பாது­காத்­துள்ளோம்.

இலங்கை இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையால் பொது­மக்­க­ளுக்கோ நாட்­டிற்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக கூறு­கின்றேன்.

நாட்டில் இடம்­பெற்ற 30 வரு­ட­கால யுத்­ததின் போது இரா­ணுவ வீரர்­களின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது. எனி­னும்­முன்னாள் இரா­ணுவ தள­ப­திகள் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக நான் அறிந்தேன். உடனடியாக அது தொடர்பில் விசாரித்துப் பார்த்தேன். அது வெ ளிநாட்டு தூதுவர்களாக இருந்த இராணுவ அதிகாரிகள் குறித்த விசாரணையென்று அறிந்துகொண்டேன் எனினும் இவ்வாறு விசாரணைக்கு அழைத்­தமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரி­யாது. பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் எனக்கு அறி­வு­றுத்­த­வு­மில்லை. இந்த செயற்­பாட்டை நினைத்து நான் வருந்­து­கின்றேன்.

அத்­தோடு அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் காணப்பட்ட அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுவிற்கும் பாராளுமன்றத்திற்கும் வழங்கியுள்ளோம். தற்போது நாட்டில் எவரும் காணாமல் போவதில்லை, வெள்ளை வேன் கலாசாரம் இல்லை,அரசியல் கொலைகள் இல்லை. எனினும் அரசாங்கத்தின் சிறிய பிரச்சினைகளை எடுத்துகொண்டு சில அரசியல் சக்திகள் குறை கூறிவருகின்றன. இதனை நாம் நிராகரிக்கின்றோம்.
ஆகவே நாடு என்ற வகையில் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கு அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

By

Related Post