இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்கிற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளினால் விசாரணைக்குழு அமைக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற அரசின் நிலைப்பாட்டிலும், ஜனாதிபதியின் முடிவிலும் மாற்றங்கள் இல்லை. இதன் காரணமாகவே மக்கள் ஜனாதிபதியுடனும் இந்த அரசாங்கத்துடனும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.