இலங்கையில் இடம்பெற்ற இறு திக்கட்டப் போரின்போது நிகழ்ந்தன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவ தற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு சாட்சியங்க ளைக் கையளிப்பதற்காக வழங்கப் பட்டிருந்த காலஅவகாசம் இந்த வாரத்துடன் நிறைவடைகிறது.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதிமுதல் 2011 நவம்பர் 15ஆம் திகதிவரை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் சாட்சியங்களைச் சமர்ப் பிப்பதற்காக தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவா நேரப்படி நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது.
இதற்கமைய இறுதி விசாரணை அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னதாக கிடைக்கப்பெற்ற சாட்சியங்களை விரிவாக அலசி ஆராய்வதற்கான காலஅவகாசம் விசாரணைக்குழுவுக்குக் கிடைக்கும் என்று ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆண்டு மார்ச் மாதக் கூட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இறுதி அறிக்கை பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.