ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.
புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன்.
இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நியாயமானது என கருதுகின்றேன் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இறுதி தீர்மானம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆணையாளரின் நிலைப்பாடு தீர்மானங்களில் முக்கிய தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கையை செப்டம்பருக்கு தள்ளிவைக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம்
இலங்கை போர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பை எதிர்வரும் செப்டம்பருக்கு தள்ளிவைக்க மனித உரிமைகள் பேரவை இணங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் மற்றும் இலங்கையின் போர் இடம்பெற்ற வேளையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமையை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் ஆகியோர் இந்த அறிக்கையை 28வது அமர்வு செப்டம்பரில் இடம்பெறும் போது சமர்ப்பிப்பது என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த அறிக்கை இந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும் இலங்கையில் உள்ளக விசாரணையை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும் என்று புதிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்றே பேரவை தமது தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஏற்கனவே இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கிய மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன், தமது நிலைப்பாட்டுக்கான காரணத்தை இன்று பேரவையில் தெளிவுப்படுத்தினார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க ஒரு தடவை மாத்திரமே இந்த அறிக்கை சமர்ப்பிப்பு தாமதப்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், செப்டம்பர் மாதத்தில் அறிக்கை நிச்சயமாக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இது கடினமான தீர்மானம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகையின் அடிப்படையில் அதன் அர்ப்பணிப்புக்கு இந்த சந்தர்ப்பமாகும் என்றும் செய்ட் குறிப்பிட்டிருந்தார்.