Breaking
Sat. Dec 21st, 2024

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறிப்பிட்ட அவர், ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டு மற்றம் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை இன்று புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post