Breaking
Mon. Dec 23rd, 2024
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால காலமானதைத் தொடர்ந்து வெற்றிடமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதன்மூலம் நாம் கட்சிக்கு தேவையான நேரத்தில், கட்சினை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஒரு செயலாளரை நியமித்துள்ளோம்.
அதுமாத்திரமன்றி நாம் இன்னும் பல கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படுவதற்கான பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது இந்த முயற்சிக்கு புதிய செயலாளர் தலைமை ஏற்று செயற்படுவார்.
அத்தோடு, அவரின் செயற்பாடுகளினால் கட்சி இன்னும் பலமடைய வேண்டும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க ஒரு கட்சியாக மாற்ற வேண்டும் என துமிந்த  இதன்போது கேட்டுக் கொண்டார்.

By

Related Post