Breaking
Sat. Dec 13th, 2025

நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று (29) பாராளுமன்றில் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்  வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற செயற்பாடுகள் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்ற நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தாமதிக்காமல், உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.   

-ஊடகப்பிரிவு-

Related Post