Breaking
Sun. Dec 22nd, 2024

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவதில், சட்டப் பிரச்சினை உள்ளதால், தான் உள்ளிட்ட 12 பேர், அக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக முடியாதுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இப்பிரச்சினை தொடர்பில், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகக் கூறிய மஹிந்தானந்த எம்.பி, எதிர்காலத்தில், ஒருமித்த முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து தங்களது விருப்பத்தின் பேரில் விலகுபவர்களது கட்சி உறுப்புரிமையும் நீக்கப்படும் தீர்மானமொன்றும் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

By

Related Post