Breaking
Sat. Dec 28th, 2024

இந்தியா செல்லும் ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கி வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு செயற்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதையடுத்து பாகிஸ்தான் ஆதரவோடு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு, காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டு, இங்கு பயங்கரமானத் தாக்குதல் நிகழ்த்தவும் திட்டமிட்டு உள்ளதாக இந்திய மற்றும் அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அப்படி அசம்பாவிதம் நேரும் வகையில் தீவிரவாதிகள் செயல்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் இதைக் கண்டு கொள்ளாத லஷ்கர் இ தொய்வா நாச வேலைகளைச் செய்ய தீவிரமாக செயற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தவிர வேறு சில அமெரிக்க அதிகாரிகளும் வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் போன்று வேடமிட்டு டெல்லி விடுதிகளில் தங்கியுள்ளனர் என்று தெரிய வருகிறது. மேலும், அமெரிக்காவிலிருந்து 1500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் இந்தியா வந்துள்ளனர்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் இப்போதிலிருந்தே தொடங்கி விட்டதாகத் தெரிய வருகிறது. ஒபாமா, மோடி, பிரணாப் முகர்ஜி அமரவுள்ள மேடைக்கு குண்டுகள் துளைக்காத கண்ணாடி சுவர் அமைக்கப்பட்டு, அங்கு காற்றை சுத்திகரிக்கும் வசதிகளும் செய்யப்பட உள்ளன. மேடை வரை ஒபாமா காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் மட்டும் 80 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 20 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post