Breaking
Mon. Dec 23rd, 2024

தன்னை இயேசு கிறிஸ்து என கூறிக்­கொண்ட ஒருவர் ஒபா­மாவின் நாய்­களில் ஒன்றைக் கடத்திச் செல்ல முயற்­சித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடுக்­கப்­பட்­டுள்ளார்.

49 வயது  ஸ்கொட் ஸ்டோக்கட் என்­ப­வரே வொஷிங்டன் ஹோட்­டலில் இரக­சிய பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவின் செல்ல நாய்­களில் ஒன்­றான போவை ஸ்கொட் கடத்­து­வ­தற்­கான திட்டம் குறித்து இர­க­சிய தகவல் மூலம் தெரிய வந்ததாக பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

அந்த நபரின் வாக­னத்தில் சில ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்டு இரு நாட்­க­ளின் பின்னர் அவர் விடு­தலை செய்­யப்­பட்டார். ஆயு­தங்­களை வைத்­துக்­கொள்­வ­தற்கு, அவ­ருக்குத் தடை விதிக்­கப்­பட்­டது.

தான் இயேசு கிறிஸ்து என்று சொன்­ன­துடன் தனது தந்தை ஜோன் எவ் கென்­னடி என்றும் தனது தாய் மர்லின்  மன்றோ என்றும் அவர் கூறி­யி­ருந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

‘போ’ என்று அழைக்கப்படும் இந்த நாய் அமெரிக்காவின் முதல் நாய் எனக் குறிப்பிடப்படுகிறது.

By

Related Post