சவுதி பயணத்தின் போது ஒபாமாவின் மனைவி மிஷேல் முக்காடு போடாததற்கு வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.சமீபத்தில் சவுதிக்கு ஒபாமாவுடன் பயணம் மேற்கொண்ட அவரது மனைவி மிஷேலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
அவர் முக்காடு அணியாததால் சவுதியில் சில அதிகாரிகள் அவருடன் கைகுலுக்க மறுத்து, ஒபாமாவை மட்டும் கைக்குலுக்கி சென்றனர்.இச்செயல் மிஷேலை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மேலும் மிஷேலின் உருவத்தை சவுதி தொலைக்காட்சியில் மங்கலாக்கி ஒளிப்பரப்பட்டது.
ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மிஷேல் எதற்காக முக்காடு போடவில்லை என்பது பற்றி வெள்ளை மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் மூத்த செய்தித் தொடர்பாளர் எரிக் சல்ட்ஸ் கூறுகையில், இதற்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவிகளான யர் லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சவுதி சென்றபோது முக்காடு அணியவில்லை.
அதையே மிஷேலும் பின்பற்றியுள்ளார். எனவே இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என கூறியுள்ளார்.