Breaking
Mon. Dec 23rd, 2024

சீனா – ஜப்பான் இடையே பல தீவு கூட்டங்கள் உள்ளன. இவை ஜப்பானுக்கு சொந்தமானவை. ஆனால், அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு சொந்தமான இடங்களையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அந்த நாடுகள் இடையே பதட்டமன நிலை நிலவி வருகிறது.

ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா– சீனா இடையே பனிப் போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோ சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார். அதன் பிறகு ஒபாமா பேசும் போது, சீனா தேவைப்பட்டால் கடல் பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி கொள்ளலாம் என்று கருத்து கூறினார்.

இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுதுறை ஹாங்லி கூறி இருப்பதாவது:–

தெற்கு சீன கடல் பகுதி பிரச்சினையில் தேவையில்லாமல் ஒபாமா தலையிட வேண்டாம். இந்த விவகாரத்தில் விளையாடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தலையீட்டால் தெற்கு சீன கடல் பகுதி நாடுகள் மத்தியில் பதட்டம் உருவாக்கப்படுகிறது. இது தொடரக்கூடாது.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By

Related Post