Breaking
Sat. Nov 23rd, 2024

பர்வின் சனூன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் படுதோல்வியடைந்து சிறுபான்மை மற்றும் பெருபான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து ஒதுங்கியிருப்பது அனைவரும் அறிந்த விடயமே.

இது இவ்வாறு இருக்க, சற்றுமுன் தேர்தலுக்கு முன்னும், பின்னும் அவருடன் இருந்து பிரிந்து சென்ற முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,
“தான் மிகவும் நல்லவர் எனவும், தான் ஒரு தவறும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய மகன்கள் மற்றும் தன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள் எனவும் தனது மனைவிக்கும் நகைதிருட்டும் எவ்வித சம்பந்தமும் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் ஆட்சியிலேயே இலங்கை மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும். அபிவிருத்தியில் நடவடிக்கைகளில் தான் ஊழல் செய்திருந்தால் அபிவிருத்திக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவையும் (cabinet), அதற்கு கடன் உதவி வழங்கிய நாடுகளுமே  பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

சீனா இலங்கைக்கு மிகவும் உதவிய நாடு. ஆகவே, சீனாவை இலங்கை மதித்து உரிய மரியாதை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பொலிசாரால் மஹிந்தவின் உருவப் படம் பொறிக்கப் பட்ட சுவர் கடிகாரங்கள், தேநீர் கோப்பை போன்ற மேலும் பல பொருட்கள் பொலிசாரால் கைப் பற்றப்பட்டன. இது, மக்களை சுரண்டி வந்த காசின் மூலம் பெறப்பட்ட பொருட்கள் என பரவலாகப் பேசப் படுகிறது.

இந்த பொருட்கள் சம்பந்தமாக தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ” இதனை யாரும் வைத்திருப்பது தவறில்லை அனைவருக்கும் தெரியும்” –  எனவும் குறிப் பிட்டுள்ளார்.

மேலும், தான் மற்றும் தனது குடும்பத்தார் அனைவரும் மிகவும் நல்லவர்கள் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் இந்த பொருட்கள் சம்பந்தமாக ஏனைய ஊடகங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் உண்மை போல புலப்படுகிறது.

Related Post