Breaking
Sun. Dec 22nd, 2024

இப்றாஹிம் மன்சூர்

அமைச்சர் ஹக்கீம் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் ஏன் இந்தளவு அசிரத்தையாகவுள்ளார் என்ற சிந்தனை அடிக்கடி மேலெழும்.அதற்கான விடையை நேற்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியை பார்க்கும் போது பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அமைச்சர் றிஷாத் ஒரு அகதி.அந்த அகதிகளுக்கு ஒரு துன்பம் என்றால் அது அமைச்சர் றிஷாதிற்கும் தான் என்ற விடயத்தை அவர் இன்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியில் பார்க்கக் கூடியதாக இருந்தது.அவரது பேச்சுக்களில் தன்னை எந்தளவு தாழ்த்தி இதற்கு தீர்வை பெற முயற்சிக்கின்றார் என்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

அமைச்சர் ஹக்கீம் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்.அவருக்கு இதன் பாதிப்புக்கள் அவ்வளவு இலகுவில் புரிந்து விடாது.

வட மாகாண முஸ்லிம்களுக்கு தீர்வைப் பெற வட மாகாண சபைக்கு வந்து பேச (குறித்த நிகழ்ச்சியில் உங்கள் காலடிக்கு வந்து என அமைச்சர் றிஷாத் கூறியிருந்தார்) தான் தயார் என கூறி வட மாகாண மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொண்டுக்க வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது ஆதங்கத்தை புரிந்து கொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் ஒரு மாத காலத்திற்குள் வடக்கு முதலமைச்சருடன் பேசுவதற்கு அமைச்சர் றிஷாத் சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக கூறியுள்ளார்.

இன்று முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து வில்பத்து பிரச்சினையை தீர்க்க முயல்கின்ற போதும் அதற்கு அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை.ஒரு சமூக பிரச்சினைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதை ஏன் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் விரும்பாமலுள்ளார்? ஒரு அகதியின் வாழ்வின் துயரத்தை இவர் எங்கே அறியப் போகிறார்?

இப் பிரச்சினையை அமைச்சர் ஹக்கீம் தனித்து நின்று சாதிக்கும் ஆற்றல் உள்ளதென நம்புகிறாரா? அப்படியானால் இவ்வளவு நாளும் அதனை தீர்க்காமல் விண்ணில் வீடு கட்டியா வசித்தாரா?

அமைச்சர் ஹக்கீம் அவர்களே!

அனைவரும் ஒன்றிணைந்துள்ள நேரம் நீங்களும் ஒன்றிணைந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். ஒற்றுமையை கெடுத்து விட வேண்டாம். அரசியல் தலைமைத்துவ போட்டிக்காக சமூக பிரச்சினைகளில் விளையாட வேண்டாம். சிவாஜிலிங்கம் போன்ற மாற்று இனத்தவர்கள் அமைச்சர் றிஷாத்துடன் கை கோர்த்து செயற்பட தயாராகவுள்ளனர். ஒரு மாற்று மத சகோதரர் தயாராகவுள்ளார்.நீங்கள்? இஸ்லாம் ஒற்றுமையை போதிக்கும் மதமல்லவா? நீங்கள் ஒரு முஸ்லிம் கட்சியின் அதுவும் குர்ஆன், ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தலைவர் அல்லவா?

மக்களே!

By

Related Post