Breaking
Sun. Dec 22nd, 2024

முஹம்மது முஸப்பிர்

பிறந்து ஒரு நாளோயான ஆண் சிசுவை புதைத்தார் என்று சந்தேகிக்கப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (03) தெரிவித்த முந்தல் பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பிரதேசத்தில், தான் பிரசவித்த சிசுவை கடந்த வெள்ளிக்கிழமை (02) தன்னுடைய வீட்டு வளாகத்தில் தாயொருவர் புதைத்துள்ளார். இதன் பின்னர், சனிக்கிழமை (03) முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய், தனது குழந்தை இறந்து பிறந்ததால் அதனை புதைத்து விட்டதாக குடும்ப நல தாதியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை தரப்பினரால் முந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், புத்தளம் மாவட்ட பதில் நீதவான் அபூத்தாஹீர் பஸால், சனிக்கிழமை (03) மாலை, சிசு புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சிசு இறந்த பின்னரே தான் சிசுவை புதைத்தாக, குறித்த தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தாய், முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சிசுவின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

23 வயதான ஒரு பிள்ளையின் தாயே இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post