Breaking
Thu. Dec 26th, 2024

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை பொருளாதாராத்தில் நெல் விவசாயச் செய்கையே பிரதானமாக  கொண்ட ஒரு ஊராகும்.அண்மையின் கிழக்கு மாகாணமே வெள்ளத்தில் மூழ்கி நிவாரணம் கொடுக்கும் அளவு மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக விவசாயக் காணிகள் சிலவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.அன்று மழை நீரினால் பாதிக்கப்பட்ட காணிகள் வெள்ளம் வடிந்து இரண்டு கிழமைக்குள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இது அதிகாரிகளின் அசமந்தப் போக்கில்லாமல் நீர்த் தட்டுப்பாடு போன்ற நொண்டிக் காரணங்களை கூற இயலாது.

கல்முனை மா நகர சபை உறுப்பினர் ஒருவர் கல்முனையில் பாதிக்கப் பட்ட நெல் விவசாயக்கானிகளிற்கு அமைச்சின் உதவியுடன் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்துள்ளார்  என்பதை அறியும் போது சம்மாந்துறை அரசியல் வாதிகள் ஒரு மா நகர சபை உறுப்பினரை விட வலுவிழந்தவர்களா என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.அன்வர் இஸ்மாயிலின் மரணத்தைத் தொடர்ந்து விவசாயிகளின் நலனில் அக்கரை கொள்ளும்  எவ் அரசியல் வாதியும் சம்மாந்துறையில் இல்லை என்றே கூற வேண்டும்.

எனவே,இது சம்பந்தமாக உரிய  அதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கைகளினை மேற்கொண்டு சம்மாந்துறை விவசாயிகளின் நீர்ப் பிரச்சனைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை

இலங்கை.

Related Post