Breaking
Sun. Dec 22nd, 2024

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயிலும் மாத்தறை இலக்கம் 872 ரயிலும் கிங்தோட்டை தர்மபால வித்தியாலயத்துக்கு அருகில், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணித்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் சாரதிகளின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, ரயில்களுக்கு இடையில் சுமார் 10 அடி தூர இடைவெளி மாத்திரமே இருக்கையில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ரயில்களில் ஒன்று வருவதை தூரத்தில் வைத்தே அவதானித்த ரயில் கடவை காவலாளி, சிவப்புநிறக் கொடியை அசைத்து விபத்தைத் தடுக்க உதவி புரிந்துள்ளார்.

By

Related Post