Breaking
Mon. Dec 23rd, 2024

ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது.

இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்னர், உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச ஒலிம்பிக் குழு­வினர், பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சமமேளன உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாட வேண்டும் எனவும் பேர­வையின் நிரு­வாக சபை தீர்­மா­னித்­தது.

சீனாவில் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை வியா­பித்து வரு­வது தொடர்­பான அறிக்கை ஒன்று சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது அந் நாட்டில் 35,000 பெண்கள் உட்­பட 80,000 பேர் கிரிக்கெட் விளை­யாட்டில் ஈடு­பட்­டு ­வ­ரு­வது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சீனாவில் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் வகையில் நீண்­ட­காலத் திட்டம் ஒன்றை வகுப்பதெனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிரு வாக சபை தீர்மானித்துள்ளது.

By

Related Post