ஒலிம்பிக் (2016) போட்டிக்கான பல்வேறு மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளன. உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது.
கடைசியாக 2012இல் இங்கிலாந்தில் இப்போட்டி நடந்தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. இதற்காக மொத்தம் 14 புதிய மைதானங்களை கட்டுவது, புதுப்பிப்பது என, ரூ.120 ஆயிரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செலவிடுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் முடியாமல் உள்ளன.
இங்குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்கரில் தயாராகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, சைக்கிளிங் உட்பட மொத்தம் 16 விளையாட்டுகள் இங்கு நடக்கவிருக்கிறன.
ஆனால், மைதானத்தில் இன்னும் கொங்கிரீட் குப்பைகள், இரும்பு கம்பிகள், மணல் என, கட்டுமானப் பொருட்களாகத் தான் காட்சி தருகிறது.
10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் டென்னிஸ் மைதான பணிகூட பாதிதான் முடிந்துள்ளது. சுமார் ரூ. 1000 கோடியில் உருவாகும் 16 போட்டிகள் நடக்கவுள்ள ஒரு மைதானம், வரும் டிசம்பருக்குள் தயாரானால் மட்டுமே, பயிற்சி போட்டிகள் நடத்த முடியுமாம்.
ஒலிம்பிக் பணிகளில் ஈடுபட்டுள்ள 2000 தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு கடந்த ஆண்டில் இரண்டு வாரம் வேலை நிறுத்தம் செய்தனர். இதுவும் ஒரு பாதிப்பாகி விட்டது.
போக்குவரத்து வழிகள், பாலங் கள், வீரர்கள் மட்டும் செல்லும் பாதைகள், ஒலிம்பிக் மைதானத்துக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து என, பல பணிகள் அப்படியே உள்ளன.VK