ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினை தொடர்ந்து அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளதுடன், இதனால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
(11.12.09.2015) வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் தேசிய தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில் ஒலுவில் துறைமுகத்திற்கும் விஜயம் செய்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
குறிப்பாக கடலரிப்புக்கு உள்ளான பகுதி மற்றும் பாதிப்புக்குள்ளான மீனவ சமூகத்துடனும் விசேட கலந்துரையடலினையும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நடத்தவுள்ளார்.
துறைமுக நிர்மானத்தையடுத்து ஏற்பட்டுள்ள கடலரிப்பினை ஆராய உயர் அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை ஒலுவில் பகுதிக்கு அனுப்பி வைப்பதன் அவசியத்தை அமைச்சர் றிஷாத் பதியுதீன் கப்பல் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒலுவில் பிரதேசத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.