அம்பாறை ஒலுவில் துறை முகம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய மூன்றாம் கட்ட விஜயம் ஒன்றை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மேற்கொண்டார்.
குறித்த விஜயமானது இன்று (17) இடம் பெற்றதுடன் மீனவர்களின் பிரச்சினைகள், கரையோர கடலரிப்பு போன்றனவும் தொடர்பில் ஆராயப்பட்டன இது தொடர்பாக பொறியியலாளர் குழுவினை நியமித்துள்ளதுடன் தெளிவான பட ஆதார விளக்கங்களையும் பிரதியமைச்சர் மீனவர்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களுக்கும் முன்வைத்தார்.
இது தொடர்பில் தெளிவான முடிவுகளை நிரந்தரமான வகையில் அமைத்துக் கொள்ள இம் மாதம் 31 ம் திகதி அமைச்சர் றிசாத் தலைமையில் மீளாய்வு இடம் பெறவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
துறை முக தங்குமிட விடுதியில் இடம் பெற்ற கலந்துரையாடலில் அட்டாளைச் சேனை பிரதேச சபை தவிசாளர் , நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பணிப்பாளர் அன்சில், முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சிராஸ் மீரா சாஹிப் உட்பட மீனவர்கள் , கட்சி உறுப்பினர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.