ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர் அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது மீனவச் சமூகம் , ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான குடியிருப்பாளர்கள் இரு சமூகமும் பாதிக்கப்படாத வண்ணம் செயற் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
ஒலுவிலில்( 18) துறை முக அதிகார சபையின் விடுதியில் மீனவச் சமூகம் மற்றும் பள்ளி நிருவாகம் ஆகியோர்களுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் மீனவர்களுடைய தொழில்களை சுமூகமாக செய்யக்கூடிய நீண்ட கால அபிவிருத்தி ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் நோக்காகக் கொண்டு அபிவிருத்தியடைய உள்ளது .
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் சாகல ரத்நாயக ரிசாத் ஆகியோர்களுக்கும் இது விடயமாக பாரிய திட்டம் ஒன்றை வகுத்து கலந்துரையாடியுள்ளேன்.
மறைந்த தலைவரால் உருவாக்கப்பட்ட ஒலுவில் துறை முகம் அபிவிருத்தி செய்யப்படவில்லை ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எந்தச் சமூகத்துக்கும் பிரச்சினையற்ற நீதியான திட்டமொன்றை அமைக்க பாரிய பொறுப்புடன் உள்ளோம்.
இதற்காக தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எதிர் வருகின்ற கிழமைக்குள் சரியான ஆலோசனைகளை வழங்கினால் பிரச்சினைகளை தீர்த்து அபிவிருத்திக்காக தூர நோக்குடன் செயற்பட முடியும் .
துறை முக விடயம் தொடர்பில் ஐந்து பொறியியலாளர்கள் குழுவை வரவழைத்து எனது அமைச்சில் கலந்துரையாடவுள்ளேன் பல்வேறு திட்டங்கள் ஊடாக ஒலுவில் துறை முகம் எவ்வாறாக அபிவிருத்தி அடையச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் கரையோர பாதிப்பற்றதும் மீனவச் சமூகம் பயன் பெறக்கூடிய பொருளாதார வலயமாக மாற்றுவதுடன் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் வழங்க முடியும் என்றார்.