Breaking
Sat. Dec 28th, 2024

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறை முக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது நேற்று (20) திங்கட் கிழமை ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. மிக நீண்ட காலத்தின் பின் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் முயற்சியின் பலனாக நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டதாக பயனாளிகள் தெரிவித்தனர். காணிகளை இழந்த 20 பயனாளிகளுக்கு இவ் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது. சுமார் 34.4 மில்லியன் ரூபாவுக்கான காசோலைகள் மொத்தமாக இதன் போது வழங்கி வைக்கப்பட்டன . குறித்த நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர், மன்சூர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, தவிசாளர் அமானுள்ளா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

 

Related Post