Breaking
Tue. Dec 24th, 2024

றியாஸ் ஆதம்

கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவணத்தினூடாக அம்பாரை மாவட்டமெங்கும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டடு வருகிறது. பாலமுனை பிரதேசத்திற்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு (2015.05.02) சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாலமுனை அமைப்பாளர் எம்.எம் றிஸ்வான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கௌரவ அதிதியாகவும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் முபீத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா, மருதமுனை, நாவிதன்வெளி அமைப்பாளர் சித்தீக் நதீர் ஆகியோருடன் பல அதிதிகளும் கலந்துகொண்டனர்.

Related Post