இலங்கை மீது ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்வதாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவானது உத்தியோகபூர்வமற்ற முறையில் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரிடம் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
இணையத் தளத்தில் காலக்கெடு அக்டோபர் 30 எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் உள்ளூர் பத்திரிகை ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இத்திகதி ஒக்டோபர் 30 ஆகும். அது நீடிக்கப்பட மாட்டாதெனத் தெரிவித்திருந்தார்.
வெற்றுத் தாள்களில் ஒப்பமிடப்பட்டு இலங்கைக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட சாட்சிகளைப் பெற முயன்றுள்ளமை குறித்தும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் பிரதம முகவராகச் செயற்பட்டவர் கைது செய்யப்பட்டார். மற்றவர் சட்டவிரோதமாக நாட்டை விட்டுச் சென்றதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.