Breaking
Mon. Dec 23rd, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்

இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 வாக்குகளையேனும் மைத்திரிபால சிறிசேன வுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் மாற்றத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வாக்காளர்களிடம் கேட்டுள்ளார்.

இன்று நள்ளிரவுடன் நிறைவுறும் இறுதி தேர்தல் பிரசாரத்தினை நிறைவு செய்ய முன்னர் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களிடமும் இந்த வேண்டுகோளைவிடுப்பதாக தெரிவித்துள்ள தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் குறிப்பாக தமிழ் பேசும்,தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு தமது மத,கலாச்சார உரிமைகளை பாதுகாக்க நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவதர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ அஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,போன்றவர்களுக்கு எதிராக அவரது அரச ஊடகங்களை பையன்படுத்தி படுமோசமான முறையில் பிரசாரங்களை இன ரீதியாக சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றார்.எந்தளவுக்கு என்றால் இந்த நாட்டில் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடும் அளவுக்கு,சிறுபான்மை மக்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களை விதைத்து வருகின்றார்.

இந்த விஷக்கருத்துக்களை சிங்கள மக்கள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது,நாம் இந்த பிரஜைகள்,ஒற்றுமையினை நேசிப்பவர்கள்,எமது இலக்கு,நோக்கு இந்த நாட்டில் அமைதியும்,சமாதானமும்,புரிந்துணர்வினையும்,மக்கள் ஏற்றுக் கொள்ளும் அபிவிருத்திகளையும் கொண்டு செல்வதே ஆகும்.

கல்விமான்கள் தமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும்,ஊடகவியளாலர்கள் தமது எழுத்தாற்றலை பயன்படுத்த வேண்டும்,உலமாக்கள் சத்தியத்தை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.செல்வந்தர்கள் தமது பணங்களை நல்லாட்சிக்கும் மக்களின் விமோசனத்திற்குமாக இந்த போராட்டத்திற்காக செலவு செய்ய வேண்டும்.

என்னென்ன வழிகளில் உதவி செய்ய வேண்டுமே அந்த வழிகளில் இந்த நேரங்களை அனைவரும் பயன்படுத்தி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்ளின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் உங்களிடம் வேண்டிக்கொள்கின்றேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இலங்கை வாழ் மக்களிடம் வேண்டுகோள்வடுத்துள்ளார்.

Related Post