Breaking
Tue. Dec 24th, 2024

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று (29.12.2014) திங்கட்கிழமை ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் எதிரணி பொது வேட்பாளா் மைத்திரிபால சிறிசேன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிஷாட் பதியூதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா்  ரவூப் ஹக்கீம்,, ஐ.தே. கட்சி பிரதித்தலைவா் கரு ஜயசூரிய முன்னாள் கடற்றொழில் அமைச்சா் ராஜித சேனரத்ன பாராளுமன்ற உறுப்பினா் அல்ஹாஜ் MSS. அமீா் அலி, மாகாண சபைத் பிரதித்தவிசாளா் MS. சுபைா், ஐ.தே. கட்சி தேசிய அமைப்பாளா் தயா கமகே,, மாகாண சபை உறுப்பினா் அஸாத் ஸாலி ஆகியோர் கலந்து கொண்டனா்.

பொதுவேட்பாளா் மைத்திரிபால சிறிசேன அவா்கள் உரையாற்றும் போது இந்த அரசு உங்களுக்கு நிவாரண பொருட்களை அள்ளி வழங்கும், சாரி தருவாா்கள், மோர்ட்டா் பைக் தருவாா்கள், மொபைல் போன் தருவார்கள், ஆட்டோவும் தருவார்கள் இவைகளை முண்டியடித்துக்கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

ஏனெனில் இது அவா்களின் பணமல்ல இது உங்களின் பணம் ஆனால் ஜனவரி மாதம் 8ம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என தனதுரையில் குறிப்பிட்டார். குறுகிய நேரம் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு கல்குடாவின் நாலாபக்கமும் இருந்து பெருந்திரளான மக்கள் கூட்டம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post