Breaking
Sat. Jan 11th, 2025

அஹமட் இர்ஸாட்

சில நாட்களுக்கு முன்பாக ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களால் சபையின் தவிசாளர் KPS. ஹமீட் அவர்களுக்கு எதிராக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்ட மகஜர் ஒன்று இணைய தளங்களிலும், முகநூல்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதன் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட தவிசாளர் மீது அதிர்ப்தி அடைந்துள்ள பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டாக சந்தித்து இணையதள வாசகர்களுக்காக செய்தியினை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு நேற்று முன்தினம் (01) கிடைத்தது. அதனை எமது இணையதள வாசகர்களுகாக தருகின்றேன்.

01இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஓட்டமாவடி பிரதேச சபையானது 2011 ஆண்டு கல்குடாவின் சிரேஸ்ட அரசியல் தலைமையின் பாரளமன்ற தோல்விக்கு பிற்பாடு பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் அமோக வெற்றியின் பலனாக ஓன்பது உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையினை ஏழு கதிரைகளை கைப்பற்றி பலமான முறையில் பிரதேச சபையை கைப்பற்றியது.

குறிப்பிட்ட பிரதேச சபை தேர்தலின் போது ஓட்டமவடி பிரதேச முக்கியஸ்தர்களின் விருப்பங்கள் உள்வாங்கப்பட்டு சிரேஸ்ட கல்குடவின் தலைமையின் கீழ் இப்போது இருக்கின்ற ஆளும்கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டிருந்தார்கள்.

அந்தவகையில் கல்குடாவின் தலைமையினால் அதிக விருப்புவாக்குகள் பெறுபவருக்கே தவிசாளர் பதவி வழங்கப்படும் எனறு தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்ட காரணத்தினால் தேர்தல் வெற்றிக்கு பிற்பாடு கல்குடாவின் சிரேஸ்ட அரசியல் பிரமுகரினால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது பிரதேசத்துக்கு அழைக்கப்பட்டு பெரும்திரளான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் கல்குடாவின் தலைமையினால் கொடுக்கப்பட்ட தேரதல் வாக்குறுதி காப்பற்றப்படும் விதமாக அதிக விருப்பு வாக்குகலை பெற்ற தற்போதைய தவிசாளர் KPS. ஹமீட் அவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டதுடன், ஓட்டமவடி பிரதேச சபையில் நீண்டகாலமாக சபை ஊறுப்பினராக இருந்துவரும் AM.நெளபர் அவர்கள் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

இதனடிப்படையில் இம்முறை ஆளும் கட்சி உறுபினர்களான A.மீராசாஹிப், AL.ஜுனைடீன், SI.முஹாஜிரீன், SA.அன்வர் ஆகியோருடன் எதிர்கட்சி உறுப்பினர்களான LTM.புர்கான், MM.அஹமட் லெப்பை ஆகியோர் கையொப்பமிட்ட தவிசாளருக்கு எதிரான மகஜரானது, பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

04ஆனால் ஆளும் கட்சியில் இருக்கும் ஏனைய இரண்டு உறுப்பினர்களான பிரதி தவிசாளர் AM.நெளளபர், IT.அஸ்மி ஆகியோர் நடுநிலை வகிப்பதாகாக கூறப்படுகின்றது.

இந்த மகஜரில் முக்கிய விடயமாக மிக நீண்டகாலமாக தவிசாளரினால் சபையானது பிழையன முறையில் வழி நடத்தப்படுவதாகவும், பிழையான முகாமைத்துவம், நிதிநடவடிக்கைகள் தொடர்பான பிழையான கையாளுகை, ஏனைய உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் என்பன அதிகளவில் மீறபடுகின்றன என்பன முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இது சம்ந்தமாக விளக்கமளித்த குறிப்பிட்ட ஆறு பிரதேச சபை உறுப்பினர்களும், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் இவ்வறான பல பிரச்சனைகள் சபை அமர்வில் சுட்டிகாட்டப்பட்டும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டும் வரசெலவு திட்டமானது தோற்கடிக்கப்பட்டது.

பின்பு தவிசாளருக்கு நான்கு மாதங்கள் காலக்கெடுவும் உறுப்பினர்களால் தவிசாளரின் பிழைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவை எதுவும் உரிய முறையில் நிவர்த்தி செய்யப்படவில்லை என்பதனாலும், பிரதேசத்தின் மக்கள் பிரதேச சபை மீது கொண்டுள்ள நம்பிக்கையானது நாளுக்குநாள் குறைவடைந்து செல்வதனாலும், மக்களின் பலவாரான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதனாலும் மீண்டும் குறிப்பிட்ட ஆறு பிரதேச சபை உறுப்பினர்களும் தவிசாளருக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

Related Post