Breaking
Mon. Dec 23rd, 2024

வருகின்ற 2017ம் ஆண்டு தனது நூற்றாண்டினை கொண்டாட காத்திருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 2016ம் மற்றும் 2017ம் ஆண்டுக்கான புதிய மாணவ தலைவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வானது தேசியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டும் நிகழ்வாக கோலாகலமாக கல்லூரி மைதானத்தில் திங்கட் கிழமை 10.10.2016 இடம் பெற்றமை மட்டக்களபு மாவட்ட பாடசாலைகளின் வரலாற்றில் எல்லோராலும் பேசப்படும் விடயமாக காணப்படுகின்றது. அத்தோடு ஓவொரு வருடமும் ஒக்டோபர் 10ம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் மானவ தலைவர்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வரலாறு நிகழ்விற்கு பிரதம அதீதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து சிறப்பித்தார்.

விஷேட அதீதிகளாக முன்னாள் கல்லுரியின் அதிபரும் ஓட்டமாவடி கோட்டக்கல்வி பணிப்பாளருமான எம்.எல்.ஏ.ஜுனைட், வாழைச்சேனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பழையமாணவர்கள், பெற்றார் பாதுகாவலர் சங்கம், கலூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை மேலும் திறம்பட நடாத்தி முடித்தமையானது ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் பிரதேச மக்கள் கொண்டுள்ள அக்கரையினை எடுத்துக்காட்டியதுடன் கல்குடா பிரதேசத்திற்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரியானது ஓர் எடுத்துக்காட்டான பாடசாலையாக இருந்து வருவதனை தொடர்ச்சியாக தக்க வைத்துள்ளமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

By

Related Post