இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவிருந்த ஆடம்பர விடுதி மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் குறித்த திட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லையென ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தெரிவித்துள்ளது.
பக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசு நேற்று அறிவித்தது.
புதிய அரசின் இந்த தீர்மானத்தின் காரணமாக தமது கம்பனி இந்த திட்டத்தை நிறுத்தப்போவதாக கிறவுன் குரூப் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு இந்த கம்பனிக்கு பல வரி சலுகைகளை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போது அந்த சுற்றுலா மையங்களில் கசினோவை நாம் அனுமதிக்கமாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.