Breaking
Tue. Mar 18th, 2025

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று (6) பிறப்பித்தார்.

குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை அறிக்கையை பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

By

Related Post