கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு நன்றி தெரிவிக்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹொரணையிலுள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக சிறைக்குச் செல்லவும் தயாரென அவர் இதன்போது தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட சமாதானத்தின் அடிப்படையிலேயே தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.