Breaking
Fri. Nov 15th, 2024

நாட்டின் பாதுகாப்பு கடந்த ஆட்சியில் அமெரிக்க பிரஜையான கோத்தாபயவுக்கும், வெளிநாட்டுசேவை அவுஸ்திரேலிய பிரஜை பாலித கொஹணவுக்கும் வழக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள் மத்திய வங்கி ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நியமிக்கப்பட்டதாக கேள்வியெழுப்புவதில் எந்தளவு நியாயமானது.

வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு மத்திய வழங்கி ஆளுநர் பதவி வழங்க சட்டத்தில் எந்தத் தடையும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அர்ஜுன மகேந்திரன் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டும் தொகையைவிட 270 மடங்கு அதிக தொகை கடந்த ஆட்சியில் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனை மறைக்கவே இவ்வாறு இடையூறு செய்வதாகவும் தெரிவித்தார்.

மத்திய வங்கி ஆளுநரின் நியமனம் தொடர்பில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார். அமெரிக்க பிரஜைகள் குறித்து கடந்த ஆட்சியில் கேள்யெழுப்பியிருந்தால் தினேஷ் குணவர்த்தனவுக்கு வெள்ளை வானில் இறுதியாத்திரை செல்ல நேரிட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மேலும் கூறியதாவது,

பொருளாதார நிபுணர்கள் அல்லாத வர்களையே கடந்த அரசு மத்திய வங்கி ஆளுநராக நியமித்தது. அவர் குறித்த நிதிக் குற்றச்சாட்டு குறித்து கூட ஆராயப் படவில்லை.

இவரின் நியமனத்தால் மத் திய வங்கியின் அன்றாட பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் டொமினிக் ஸ்டுவிங்கான் போன்ற பிரான்ஸ் நாட்டவரின் உதவியை நாட நேரிட்டது. அவருக்கு 5 இலட் சம் டொலர் வழங்கப்பட்டது. பொருளாதார நிபுணர்களற்ற நபர்களின் நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்தது. மோசடி ஊழல் அதிகரித்தது.

அரச நிறுவனங்களில் பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றன. இலங்கை விமானச் சேவையிலிருந்து சகல அரச நிறுவனங்கள் வரை பாரிய மோசடிகள் இடம்பெறுவதற்கு மத்திய வங்கி இடம் அமைத்துக் கொடுத்தது. ராஜபக்ஷ ஆட்சியில் செய்தது போன்று நான் ஸ்டுவிங்கான்களை இலங்கைக்குத் தருவிக்கவில்லை. இலங்கையில் பிறந்த நிபுணர்களைத்தான் தருவித்தோம்.

ஆனால் எதிர்க்கட்சி இந்த நிபுணரைக் கண்டு பயப்படுகிறது. அவரூடாகக் கடந்த காலத்தில் நடந்த பாரிய மோசடிகள் பகிரங்கமாவதே அதற்குக் காரணமாகும். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் வளர்ந்த தனவந்த அடியாட்களுக்கு சட்ட விரோதமாக பணம் உழைப்பது தடைப்பட்டுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது.

அர்ஜுன மகேந்திர மோசடி செய்ததாகக் கூறும் தொகையை விட 270 மடங்கை விட அதிக தொகை மோசடி கடந்த காலத்தில் நடந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதனால் தான் எமது பயணத்திற்கு இடையூறு செய்யப்படுகிறது.

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்ற வர்களுக்கு இங்கு தொழில் செய்யவோ, வர்த்தகம் செய்யவோ தடையில்லை. மக்கள் பிரதிநிதியாக வருவதற்கு மட்டுமே சட்டத்தினூடாக தடைவிதிக்கப் பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் அமெரிக்க பிரஜை களுக்கு நாட்டின் பாதுகாப்பை கையளித்த போது இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தால் அது நியாயம் எனலாம்.

எதிரிகளை தோற்கடிக்க அமெரிக்க அரசியலமைப்பின் படி செயற்படுவதாகவும் அமெரிக்க சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதாகவும் தேவை ஏற்பட்டால் இராணுவத்தில் இணைவதாகவும் சத்தியப் பிரமாணம் செய்த ஒருவருக்கே நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2005 நவம்பர் 24ஆம் திகதி அவர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 30ஆம் திகதியே அவருக்கு இரட்டை பிரஜாவுரிமை கிடைத்தது.

உதயங்க வீரதுங்க, ஜாலிய விக்கிரம சூரிய, பாலித கொஹன, லக்ஸ்மன் ஜயவீர போன்ற முக்கிய பதவி வகித்தவர்கள் வெளிநாட்டு பிரஜைகளாகும். கடந்த ஆட்சியில் சிலர் திருட்டுத்தனமாக வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றுள்ளனர்.

வெளிநாட்டுச் சேவை அவுஸ்திரேலிய பிரஜைக்கு வழங்கப்பட்ட போதும் எவரும் கேள்வி எழுப்பவில்லை. அன்று வாய்மூடி இருந்தவர்கள் இன்று அர்ஜுன மகேந்திரனின் பிரஜா உரிமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு கேள்வி எழுப்பும் அளவு சுதந்திரமிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டும். அன்று தினேஷ் குணவர்த்தன அமெரிக்க பிரஜைகள் குறித்து கேள்வி எழுப் பியிருந்தால் வெள்ளை வேனில் இறுதி யாத்திரை செல்ல நேரிட்டிருக்கும். இன்று அத்தகைய நிலை கிடையாது. சிலந்தி கூடுகட்டியிருந்த வாய்கள் இவ்வாறாவது திறந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

அமெரிக்க பிரஜா உரிமையை கை விடும் எந்த நோக்கமும் கோத்தாபயவுக்கு கிடையாது. அமெரிக்க பிரஜை ஒருவருக்கு வேறு நாட்டில் அவர்கள் குறித்த தகவல்களை இந்த சபைக்கு முன்வைக் குமாறு எதிர் தரப்பினரிடம் கோருகிறேன். இவர்கள் சீசெல்ஸ், கேமன் தீவு, பிரித்தானிய வர்ஜின் தீவு, மொனாகா, உகண்டா போன்ற நாடுகளில் பிரஜா உரிமை பெற்றுள்ளதாக தகவல் கிடைத் துள்ளது. முடிந்தால் அது தவறு என நிரூபியுங்கள்.

மத்திய வங்கி ஆளுநராக மக்கள் பிரதிநிதியையோ அரச, நீதிமன்ற அதிகாரியையோ நியமிக்க முடியாது. வங்கி, நிதி நிறுவனங்கள் என்பவற்றில் பதவி வகிப்பவர்களுக்கும் இந்தப் பதவி பெற முடியாது. மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு இலங்கை பிரஜை அல்லாத ஒருவரை நியமிக்க முடியாது என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. அர்ஜுன மகேந்திரன் பதவி வகிப்பதற்கு சட்டத்தில் எதுவித தடையும் கிடையாது.

Related Post