Breaking
Mon. Dec 23rd, 2024

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் மட்டும் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு கிடைத்த வருமானத்தின் தொகை 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 35 இலட்சம் ரூபாவிற்கும் குறையாதளவு பணம் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட ஏனைய பணிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தொகை மாத அடிப்படையில் ஜனவரி மாதம் 35 இலட்சத்து 8 ஆயிரத்து 550 ரூபாவும், பெப்ரவரி மாதம் 38 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாவும், மார்ச் மாதம் 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஏப்ரல் மாதம் 33 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இதேபோல் மே மாதம் 31 இலட்சத்து 85 ஆயிரத்து 850 ரூபாவும், யூன் மாதம் 34 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும், யூலை மாதம் 40 இலட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாவும், ஓகஸ்ட் மாதத்தில் 39 இலட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாவும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டெம்பரில் 50 இலட்சத்து 41 ஆயிரத்து 150 ரூபாவும், ஓக்டோபர் மாதத்தில் 46 இலட்சத்து 10 ஆயிரத்து 350 ரூபாவும், நவம்பர் மாதத்தில் 34 இலட்சத்து 32 ஆயிரத்து 700 ரூபாவுடன் டிசம்பர் மாதம் கூடிய தொகையாக 50 இலட்சத்து 2 ஆயிரத்து 900 ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆண்டு முழுவதும் மொத்தமாக 47.5 மில்லியன் ரூபா மோட்டார் போக்குவர்து திணைக்களத்தின் மூலம் 2015 ஆண்டு யாழ். மாவட்டத்தில் வருமானாக ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post