அநுராதபுரம் வலயக் கல்விப் பணிமனைக் குட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலைகளில் ஐந்து வருட காலத்துக்கு மேல் சேவையாற்றிய மற்றும் மேலதிக ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் அனுப்பப்பட்டும் இடமாற்றம் பெற்றுக் கொடுக்கப்பட்ட பாடசாலைகளில் கடமையைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக அநுராதபுரம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி குமுதுனி ஆரியவங்ச தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்றச்சங்க உறுப்பினர்கள் செய்த தவறுகளினால் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள போதும் இடமாற்றக் கடிதங்கள் கிடைத்த ஆசிரியர்கள் உடன் உரிய பாடசாலைகளுக்கு செல்வது கட்டாயமானதாகும். பல்வேறு தரப்பாரினதும் வாய்ப்பேச்சுக்கள் மற்றும் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடையாமல் உரிய பாடசாலைகளுக்குச் சென்று கடமையைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொள்வதுடன் தொடர்ந்தும் போகா மல் இருப்பவர்களது விபரங்கள் தற்போது பாடசாலைகளிலிருந்து பெறப்பட்டுள் ளன. இதன் அடிப்படையில் இம்மாதம் தொடக்கம் அவர்களது மாதாந்தச் சம்பளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என வும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.