மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயமொன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர், NAQDA திறுவனத்தினுடைய தலைவர் அதன் பொது முகாமையாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் காத்தான்குடி கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
மாவட்ட செயலகத்திற்கு முக்கிய ஓர் அபிவிருத்தி திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் உட்பட்ட உயர் அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாகவே காத்தான்குடியில் மீனவர்களின் நன்மை கருதி காத்தான்குடி கடற்கரையில் அமையப்பெற்றுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், இவ் எரிபொருள் நிரப்பு நிலையமானது 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இதுவரையில் செயலற்ற நிலையில் காணப்படுவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினை உடனடியாக பார்வையிட வேண்டுமெனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கமைவாக இதனை அமைச்சர், அமைச்சின் செயலாளர், NAQDA நிறுவனத்தினுடைய தலைவர் இதனை பார்வையிட்டதுடன் இதனை துரித கதியில் இயங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது விடயமாக தன்னுடன் தொடர்பினை மேற்கொள்ளுமாறும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மாகாண சபை உறுப்பினர் இவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இயங்க வைப்பதற்கு ஆரம்பம்தொட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.