Breaking
Mon. Jan 13th, 2025

தங்கள் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவேண்டாம் என சர்வதேச கடல் அமைப்பிற்கு வட கொரியா அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.

கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணைகளை வீசுவதற்காகவே வட கொரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தென்கொரியா அலறியுள்ளது. வரும் வியாழனன்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளரான அஷ்டான் கார்டர் தென் கொரியா வர உள்ள நிலையில், வட கொரியாவின் இந்த அறிவிப்பு கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளியன்று தான் பியாங்யாங்கில் இருந்து மேற்கு கடற்பகுதியில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது.

இம்முறை 1300 கி.மீ. தாண்டிச்சென்று தாக்கும், மத்திய தர ஏவுகணையான ரோடாங் ஏவுகணையை வீச வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏப்ரல்-1 முதல் எந்த கப்பலும் கிழக்கு கடற்பகுதியில் பயணிக்கக்கூடாது என்று கூறியுள்ளதால் எந்நேரமும் ஏவுகணை ஏவப்படலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஏவுகணைகள் வீசுவதன் மூலம், ஆண்டுதோறும் அமெரிக்காவும், தங்கள் நாடும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சியின் போது பதட்டத்தை விளைவிக்க வட கொரியா முயல்வதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்டம் நிலவு வரும் நிலையில், தங்கள் நாட்டை வேவு பார்த்ததாக கூறி தென் கொரியாவை சேர்ந்த இருவரை கடந்த நில தினங்களுக்கு முன் வட கொரியா கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post