அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசம் நீண்டகாலமாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனால் அப்பிரதேச மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஒலுவில் துறைமுக கட்டுமான பணிகளின் பின்னர் கடற்கரையை அன்டிய பிரதேசம் நாளாந்தம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவதுடன் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும், நிலங்களும் காவு கொள்ளப்படுகின்றது இதனால் அப்பிரதேச வாழும் ஆழ்கடல், கரைவலை மற்றும் நன்னீர் மீனவர்களின் தொழில்களும் பாதிக்கப்படுள்ளதுடன் கடற்கரையை அன்டிய துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடையும் நிலையும் காணப்படுகின்றது.
இதுதொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஒலுவில் மத்திய குழுவின் அமைப்பாளர் எஸ்.எல் நிசார் அக்கட்சியின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுத்தின் அவர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதனையிட்டு நாளை 2015.09.12 ஆம் திகதி சனிக்கிழமை ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியினை பார்வையிடவுள்;ளதாகவும் அமைப்பாளர் நிசார் தெரிவித்தார்.