Breaking
Mon. Dec 23rd, 2024

ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு தம்பதி கடலில் தொலைத்த தமது திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளது.

அகஸ்டின் அலியகா என்பவரும் அவரின் மனைவி குவானி சான்செஸும் 1979 பெப்ரவரி 17 ஆம் திகதி திருமணம் செய்திருந்தனர்.

இத்திருமணத்துக்கு சில மாதங்களின் பின்னர் கடலில் நீந்திக்கொண்டிருந்த போது, அகஸ்டின் அலியகா அணிந்திருந்த மோதிரம் கடலில் வீழ்ந்தது. தேடுதல் நடத்திய போதிலும் அம்மோதிரத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இநநிலையில், கடந்த மாதம் பெனிடோர் நகரில் கரையோரத்தில் சுழியோட்ட வீராங்கனையான ஜெஸிக்கா குவெஸ்டா இம்மோதிரத்தை கண்டுபிடித்தார். 1979 பெப்ரவரி 17 எனும் திகதியும் பொறிக்கப்பட்ட மோதிரம் இது.

இம்மோதிரத்துக்கு உரியவரை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து பேஸ் புக்கில் அவர் தகவல் வெளியிட்டார்.

80,000 இற்கும் அதிகமானோர் இத்தகவலை பரிமாறிய நிலையில், அகஸ்டின் குவெஸ்டாவுக்கும் இத்தகவல் சென்றடைந்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மேற்படி மோதிரத்தை அகஸ்டின் அலியகாவிடம் ஜெஸிக்கா கையளித்தார்.

By

Related Post