Breaking
Tue. Dec 24th, 2024

நாரமில பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நாரம்மல, தம்பகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியும், 26 வயதுடைய தாயொருவரும் என்று தெரிய வந்துள்ளது.

சிலாபம் முன்னேஷ்வரம் கோயிலிற்கு தமது குடும்பத்தினருடன் வந்திருந்த நிலையில் கடலில் நீராடச் சென்ற வேளையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவர்கள் இருவருடைய உடல்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு,சடலம் தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

By

Related Post