Breaking
Sat. Dec 28th, 2024
தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான வசன மற்றும் கவிதையடிப்படையிலான கட்டுரை போட்டியொன்றை நடத்த கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நீல நீரில் உருவாகும் பொருளாதாரத்திற்கு சமுத்திர சூழலை பாதுகாப்பது அவசியம் என்ற தொனிப்பொருளில் இக்கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது.
கடல் எமது வளம்- கடல் பொருளாதாரத்திற்கான அடித்தளம்- சமுத்திரத்தைப் பாதுகாப்பது எமது கடமை- கடலை பாதுகாத்தால் நாமும் பாதுகாப்பாயிருப்போம்- மற்றும் உயிரின் ஆரம்பம் மகா சமுத்திரம் ஆகிய தலைப்புக்களுக்கு பொருத்தமான வகையில் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம்.
தரம் 6, 7, 8 – தரம் 9,10.11-12, 13 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆக்கங்களை தமிழ் மொழியில் எழுதி அனுப்ப முடியும்.
அனைத்து ஆக்கங்களையும் இம்மாதம் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் பொது முகாமையாளர்-இல 758- பேஸ்லைன் வீதி- கொழும்பு 9 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
அனைத்து வயது மட்டங்களிலும் வெற்றிபெரும் மாணவ மாணவிகளுக்கு பணப்பரிசில்கள்- வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களை  0112687520/ 0112672757 என்ற முகவரியினூடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என அதிகாரசபை தெரிவித்துள்ளது..

Related Post