மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது.
ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும்.
வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்துக்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச் சேவை என்பன ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெறும்.
அதேநேரம், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை இடம்பெறமாட்டாது.
எனினும், ஓகஸ்ட் 26 இலிருந்து 29 வரையான திகதிகளில் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் துறைமுகச் செயற்பாடுகள் இயல்பான முறையில் நடைபெறும் என குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.