Breaking
Mon. Dec 23rd, 2024

கடுகண்ணாவை, இலுக்வத்தைப் பிரதேசத்தில் இடம் பெற்ற மண் சரிவில் பின்வருவோர் காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.

கடுகண்ணாவை பிரதேசத்திலுள்ள ரம்மலக, வட்டப்பொல என்ற இடத்திலுள்ள 104, மற்றும் 103 ஆம் இலக்க வீடுகள் இரண்டும் மண்ணில் புதையுண்டாதகவும் அப்போது 104ஆம் இலக்க வீட்டிலிருந்தவர்களான சபீனா பேகம் (42 வயது), மொகமட் சியான் (08 வயது), மொகமட் சபீக்(15 வயது) ஆகியோரும் 103 ஆம் இலக்க வீட்டிலிருந்த மும்தாஸ் பேகம் (49 வயது), மொகமட் ரஸ்மீன்( 25வயது), மொகமட் அம்ஜாட் (15 வயது) ஆகியோர்கள் காணாமற்போயுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 17 ஆம் திகதி மாலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக கண்டி மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சடலங்கள் சபீனா பேகம்(42) மற்றும் அவரது மகன் மொகமட் சியான்( 08) ஆகியோர்களினது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடாந்தும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் தொண்டா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post