Breaking
Mon. Dec 23rd, 2024
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிசோப் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன.

நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்.

நாட்டின் சில பகுதிகள் தமக்கு மட்டும் சொந்தமானது என நினைப்பது பிழையானது. அவ்வாறு உரிமை வழங்கும் எந்தவொரு உறுதியும் எங்கும் எழுதப்படவில்லை.

இன அல்லது மத ரீதியான பிரிவினைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கர்தினால் தெரிவித்துள்ளார்.

By

Related Post